ADDED : செப் 21, 2026 05:51 PM
கம்பம், செப். 22
தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பாலி கிளினிக் அமைக்க நடவடிக்கை எடுக்க கால்நடை வளர்ப்போர் கேளிக்கை விடுத்துள்ளனர்.
தேனி விவசாயம் சார்ந்த மாவட்டமாகும். விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பே பிரதான தொழிலாகும். பசுக்கள், காளைகள், கோழிகள் அதிகமாக வளர்க்கப்படுகிறது. கால்நடை பராமரிப்பு துறை சார்பில் தேனி, போடி, பெரியகுளத்தில் கால்நடை மருத்துவமனைகள் உள்ளன. மற்ற ஊர்களில் மருந்தகங்கள், கிளை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான கிளை நிலையங்கள் செயல்பாட்டில் இல்லை. கால்நடைகளுக்கு அறுவை சிகிச்சை, நோய் தாக்குதல், அவசர சிகிச்சை என்றால் திண்டாட்டம் தான்.
எனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே மாவட்டந்தோறும் பாலி கிளினிக் அமைக்க அரசு உத்தரவிட்டது.
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் அமைக்கப்பட்டது. ஆனால் தேனி மாவட்டத்தில் அமைக்கப்படவில்லை.
இங்கு கால்நடை பல்கலை. இருப்பதை சுட்டிக் காட்டி அனுமதி மறுத்துள்ளனர். கால் நடைகளுக்கு அறுவை சிகிச்சை, அவசர சிகிச்சை என்றால் பல்கலை.,யில் பார்க்க மாட்டார்கள். எனவே தேனி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பாலி கிளினிக் அமைக்க கால்நடை வார்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
