தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ 3 மாதங்களில் 5,600 வழக்குகள் பதிவு

3 மாதங்களில் 5,600 வழக்குகள் பதிவு

3 மாதங்களில் 5,600 வழக்குகள் பதிவு


UPDATED : செப் 21, 2026 05:34 PM

ADDED : செப் 21, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 05:34 PM ADDED : செப் 21, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி:தேனி மாவட்டத்தில் மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் அண்மை காலங்களில் விபத்துகள் அதிகரித்துள்ளது.

பாரஸ்ட் ரோட்டில் 2 தினங்கள் முன்பு மதுபோதையில் டிரைவர் ஓட்டிசென்ற ஆட்டோ மோதி ஒருவர் பலியானார். பெரியகுளம் ரோட்டில் அன்னஞ்சி, பொம்மையகவுண்டன்பட்டி பகுதிகளில் ரோட்டை கடப்பவர்கள் மீது மோதும் வாகனங்களில் பல மதுபோதையில் ஓட்டி வந்தவை என போலீஸ் தரப்பில் கூறுகின்றனர். இதனை தொடர்ந்து மதுபோதையில் வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது வழக்கு, அபராதம் விதிக்க எஸ்.பி., பிரவீன் கவுதம் உத்தரவிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் 5,600 வழக்குகள் மதுகுடித்துவிட்டு டூவீலர்கள் ஓட்டியவர்கள் மீது பதியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் இதே காலத்தில் 3400 வழக்குகள் பதிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us