தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ மானியத்தில் விதைகள் உயிர் உரங்கள் பெற அழைப்பு

மானியத்தில் விதைகள் உயிர் உரங்கள் பெற அழைப்பு

மானியத்தில் விதைகள் உயிர் உரங்கள் பெற அழைப்பு


ADDED : செப் 21, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆண்டிபட்டி, செப்.22-

ஆண்டிபட்டி பகுதியில் மானிய விலையில் வழங்கப்படும் விதைகள் மற்றும் உயிர் உரங்களை வாங்கி பயன்படுத்துமாறு வேளாண்மை உதவி இயக்குனர் கண்ணன் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆண்டிபட்டி பகுதியில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு பணிகளை தொடரலாம். ஆண்டிபட்டி வேளாண் அலுவலகத்தில் நெல், சோளம், கம்பு, பாசிப்பயறு, உளுந்து, துவரை, மக்காச்சோள விதைகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் மூலம் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் நுண்ணூட்ட கலவை ஆகியவையும் இருப்பில் உள்ளன. பூஞ்சான கொல்லிகளான சூட மோலாஸ், ட்ரைகோடர்மா ஆகியவையும் இருப்பில் உள்ளன. விவசாயிகள் தேவையான ஆவணங்களை வழங்கி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களை பெற்று பயனடையலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us