/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பி.எஸ்.என்.எல்., சிம்கார்டில் ஒரு ரூபாய்க்கு ஒரு மாதம் பேசலாம்; பயன்படுத்திக் கொள்ள அழைப்பு

ADDED : ஆக 05, 2025 05:15 AM
தேனி,: சுதந்திர தினத்தை முன்னிட்டு பி.எஸ்.என்.எல்., சார்பில் ஒரு ரூபாயில் ஒரு மாதம் பேசலாம், தினசரி 2 ஜி.பி., டேட்டா பயன்படுத்தலாம் என என பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் பற்றி அதிகாரிகள் கூறியதாவது: ஆக.,15 சுதந்திர தினத்தை முன்னிட்டு 4ஜி வசதி உள்ள பி.எஸ்.என்.எல். சிம்கார்டு ரூ.1க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வேறு தொலை தொடர்பு நிறுவனங்களில் இருந்தும் ரூ.1 செலுத்தி பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் இணைந்த 30 நாட்களுக்கு தினசரி 2 ஜி.பி., டேட்டா,100 எஸ்.எம்.எஸ்., வரம்பில்லா அழைப்புகள் என பயன்பெறலாம்.
இத்திட்டத்திற்காக 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் நாடு முழுவதும் ஒரு லட்சம் 4ஜி கருவிகள் நிறுவப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
புதிய சிம்கார்டுகள் வாங்க, வேறு நிறுவன நெட்வொர்க் மாற தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டியில் உள்ள பி.எஸ்.என்.எல்., அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லலாம். மேலும் விபரங்களுக்கு தேனி அலுவலகத்தை 04546 -261 720 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.