ADDED : ஆக 11, 2025 04:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் மண்டபத்தில் வேளாண்துறை சார்பில் அங்கக வேளாண் விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கம் நாளை (ஆக.12ல்) நடக்கிறது.
இந்த கருத்தரங்கில் அங்கக வேளாண் தொழில்நுட்பங்கள், பல்வேறு அங்கக வேளாண் பொருட்கள், பயிர் ரகங்கள் காட்சி படுத்தப்பட உள்ளன. வேளாண் விஞ்ஞானிகள், விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பங்கேற்று பயன்பெறுமாறு கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.