ADDED : ஆக 08, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ''வேளாண் பொறியியல் துறைக்கு சொந்தமான இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.'' என,தேனி உதவி பொறியாளர் முகுந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: துறை சார்பில் மண் அள்ளும் இயந்திரம் விவசாய பயன்பாட்டிற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1250, பொது பயன்பாட்டிற்கு ரூ.1500 வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தேவைப்படுவோர் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு தேனி தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம் அருகே உள்ள வேளாண் பொறியில் துறை உதவி பொறியாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்., என்றார்.