UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 06:34 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சி சமுதாயக்கூடத்தில், பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு நல முகாம் நடந்தது.
தாமரைக்குளம் பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தலைமை வகித்தார். தென்கரை பேரூராட்சி தலைவர் நாகராஜ், வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன், செயல் அலுவலர்கள் முருகன், சின்னச்சாமி பாண்டியன், பிராதபன் முன்னிலை வகித்தனர். தாமரைக்குளம், தென்கரை, வடுகபட்டி, தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஆண்டிபட்டி ஆகிய 6 பேரூராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஹெல்மெட், தூய்மை பணிக்கான உபகரணங்கள், வருவாய்த்துறை, தாட்கோ, மருத்துவம், வீட்டு வசதி வாரியம் உட்பட 14 துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
