/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்: கலெக்டர் ஆய்வு
/
உங்களை தேடி உங்கள் ஊரில் முகாம்: கலெக்டர் ஆய்வு
ADDED : மே 23, 2025 04:32 AM
போடி: போடி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடந்தது.
மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணி, கட்டப்பட்டு வரும் நூலகம்,துணை சுகாதார நிலைய கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார். சில்லமரத்துப்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூட செயல்பாடுகள், உரக்கிடங்கு, ரூ. 126.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலைய அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
போடி தாலுகா அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்தார். வீட்டு மனை பட்டா, தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அடையாள அட்டை வழங்கி பொதுமக்களிடம் மனு பெற்றார்.
உடன் டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, திட்ட இயக்குனர்கள் அபிதா ஹனீப், சந்திரா, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது, வேளாண் துணை இயக்குனர் வளர்மதி, தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா, போடி தாசில்தார் சந்திரசேகரன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.