ADDED : அக் 15, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: ஒவ்வொரு மாதம் மூன்றாவது புதன் அன்று 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம் தாலுகா வாரியாக நடத்தப்படுகிறது. கலெக்டர் தலைமையில் மாவட்ட அலுவலர்கள் தாலுகாவில் உள்ள அரசு மருத்தவமனைகள், பள்ளிகள், அரசு அலுவலகங்களில் ஆய்வுகள் மேற்கொள்வர். பொதுமக்களிடமிருந்து நேரடி மனுக்கள் பெறப்படும்.
தேனி மாவட்டத்தில் அக்.,16 காலை முதல் அக்.,17 காலை வரை உத்தமபாளையம் தாலுகாவில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாம் நடக்கிறது.
அக்.,16 மாலை 4:30 மணி முதல் 6:00 மணிவரை தாலுகா அலுவுலகத்தில் பொதுமக்கள் நேரடியாக மனு அளிக்கலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.