ADDED : டிச 02, 2024 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. கம்பம் பாவலர் படிப்பகம் அருகில் காமயகவுண்டன்பட்டி சித்தா பிரிவும், த.மு.மு.க.,வும் இணைந்து நடத்தியது.
கம்பம் பகுதியில் பரவி வரும் வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த இந்த முகாமில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு கசாயம் வழங்கப்பட்டது. சித்தா டாக்டர் சிராசுதீன், கவுன்சிலர் சாதிக் , த.மு.மு.க., நிர்வாகிகள் அப்பாஸ், அன்சாரி, சலீம் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.