/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கிராமங்களில் புற்றுநோய் கண்டறியும் பணி தீவிரம்
/
கிராமங்களில் புற்றுநோய் கண்டறியும் பணி தீவிரம்
ADDED : ஜூன் 28, 2025 11:52 PM
கம்பம்: கிராமங்களில் ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்டத்தின் கீழ் கிராம துணை சுகாதார மற்றும் நல்வாழ்வு மையங்களில் பணியாற்றும் நர்சுகள், புற்றுநோய் கண்டறியும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
புற்றுநோயை கண்டறிந்து சிகிச்சையளிக்க தமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த புற்றுநோய் கண்டறியும் திட்டத்தை அறிவித்தது. அதன்படி அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குறிப்பிட்ட சில துணை சுகாதார நிலையம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் புற்று நோய் கண்டறியும் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள், வீடு வீடாக சென்று புற்றுநோய் தொடர்பாக துண்டு பிரசுரங்களை வழங்குகின்றனர்.
அதை நன்கு படித்து விட்டு மறுநாள் துணை சுகாதார நிலையம் வர கூறுகின்றனர். முதலில் துணை சுகாதார நிலையம், தொடர்ந்து கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மார்பகம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் போன்றவற்றை பரிசோதிக்கின்றனர். ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் நாள்தோறும் குறைந்தது 20 பேர்களை ஸ்கிரீனிங் செய்து , கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். துணை சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள் இந்த பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் மூலம் புற்றுநோய் கட்டுக்குள் கொண்டு வரப்படும் என, சுகாதாரத் துறையினர்தெரிவித்தனர்.