ADDED : செப் 20, 2026 06:02 PM
தேனி, செப்.21–
கம்பத்தில் கம்பம் பள்ளத்தாக்கு இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் ‘புற்றுநோய் அறுவை சிகிச்சையின் ஒரு பார்வை’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில் துளிர் ஹெல்த் பவுண்டேஷன் டாக்டர் ராஜா சிங்கராஜ் பேசியதாவது: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், புற்றுநோய் நிபுணர் மூலம் தனிப்பட்ட சிகிச்சைத் திட்டத்தை உருவாக்குதல் ஆகியவை சிறந்த சிகிச்சை முடிவுகளுக்கு மிகவும் அவசியமானது. மக்களுக்கு மேம்பட்ட, அறநெறி சார்ந்த தரமான, அனைவருக்கும் அணுகக்கூடிய புற்றுநோய் சிகிச்சையை வழங்க வேண்டும் என்பதே துளிர் ஹெல்த் பவுண்டேஷனின் அடிப்படை நோக்கம் என்றார்.மேலும், புற்றுநோய் சிகிச்சையில் அறுவை சிகிச்சையின் முக்கியத்துவம், பல்வகை புற்றுநோய்களுக்கான சிகிச்சை அணுகுமுறைகள், அறுவைச் சிகிச்சை திட்டங்கள் மற்றும் பல்துறை மருத்துவக் குழுவின் பங்களிப்பு உள்ளிட்டவை பற்றி விளக்கினார்.
