ADDED : செப் 20, 2026 06:51 PM
மூணாறு, செப்.21-–
இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே கொலை வழக்கில் தொடர்புடைய மூவரை கைது செய்தனர்.
கட்டப்பனை நகரில் பழைய பஸ் ஸ்டாண்ட் குஞ்சுமோன் 45. இவர் ஒரு கடை திண்ணையில் கடந்த மாதம் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். அவரை போலீசார் மீட்டு இடுக்கி மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரதே பரிசோதனை அறிக்கையில் குஞ்சுமோன் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சலூன் கடை உரிமையாளர் சுரேஷ்குமார் 54, ரினுமோன் 29, பாபுதங்கப்பன் 67, ஆகியோரை கட்டப்பனை டி. எஸ்.பி.,ரெஜி எம். குன்னிபரம்பன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது, சலுான் கடையில் சுரேஷ்குமார், குஞ்சுமோன், ரினு மோன், பாபுதங்கப்பன் ஆகியோர் இரவில் மது அருந்தினர். அப்போது ஏற்பட்ட தகராறில் மூவரும் சேர்ந்து குஞ்சுமோனை தாக்கி ரோட்டில் தள்ளிவிட்டனர். குஞ்சுமோன் அருகில் இருந்த கடை திண்ணணைக்கு ஊர்ந்து சென்றார். மறுநாள் நீண்ட நேரம் எழுந்திருக்காததால் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கூறிய தகவல் உதவியாக இருந்தது என்றனர்.
