ADDED : டிச 26, 2024 05:36 AM

தேனி: மாவட்ட போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தலைமையிலான போலீசாருக்கு கிடைத்த தகவலின் படி, பெரியகுளம் ரோடு பெட்ரோல் பங்க் முன் உள்ள பட்டாளம்மன் கோயில் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அல்லிநகரம் அம்பேத்கர் நடுத்தெருவை சேர்ந்த தினகரன் 25, மண்டு கருப்பசாமி கோயில் தெருவை சேர்ந்த தெய்வேந்திரபிரசாத் 30, ஆகிய இருவரும் 2 கிலோ 500 கிராம் கஞ்சாவை விற்பனைக்காகவைத்திருந்தது கண்டறிந்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் வடபுதுப்பட்டி முதல் நடுத்தெருவை சேர்ந்த கஞ்சா வியாபாரி சண்முகநாதனிடம் வாங்கி, அல்லிநகரம் அழகர்சாமி காலனி அம்பேத்கர் நடுத்தெருவை சேர்ந்த முரளி 32,உதவியுடன் சில்லரை விற்பனையை தொடர்வதாக தெரிவித்தனர்.
இதனால் தினகரன், தெய்வேந்திர பிரசாத், சண்முகநாதன், முரளி ஆகிய நால்வர் மீது போதைப் பொருட்கள் தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, மூவரை கைது செய்தனர்.தலைமறைவான சண்முகநாதனை தேடி வருகின்றனர்.

