/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பைபாஸ் ரோட்டில் தீ பற்றி எரிந்த கார்
/
பைபாஸ் ரோட்டில் தீ பற்றி எரிந்த கார்
ADDED : நவ 03, 2025 04:27 AM

தேனி: மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள கார் பராமரிப்பு நிலையத்தில் தேனியை சேர்ந்த மெக்கானிக் ஜோதிராஜசேகரன் 24, பணிபுரிகிறார். இந்த பராமரிப்பு நிலையத்தில் சிவகாசியை சேர்ந்தவர் காரை பரா மரிப்பு பணிக்காக கொடுத்துள்ளார்.
பழுது பார்க்கும் பணி முடித்து பின் அங்கு பணிபுரியும் ஜோதிராஜசேகரன் சோதனை செய்ய காரை தேனிக்கு எடுத்து வந்தார். காரை தேனி கர்னல் ஜான்பென்னி குவிக் பஸ் ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு பகுதிக்கு ஓட்டிச் சென்றார்.
அப்போது வனப்பகுதி வழியாக சென்ற போது காரின் முன்பகுதியில் புகை கிளம்பியது. சுதாரித்த மெக்கானிக் ரோட்டின் ஓரத்தில் காரை நிறுத்தினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்தது. தீயணைப்பு நிலையத்திற்கு மெக்கானிக் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் வந்த போது கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இச்சம்பவம் தொடர்பாக தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.

