ADDED : நவ 03, 2025 04:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: பெரியகுளம் தாமரைக்குளம் தாசில்தார் நகர் ரமேஷ் மனைவி செல்வராணி 26. மாவட்ட குடும்ப நல நீதிமன்ற தட்டச்சர்.
பணி முடிந்து வீட்டிற்கு ஆட்டோவில் இவரும், தாரணி என்பவரும் சென்றனர். லட்சுமிபுரம் தனியார் மண்டபம் அருகே ஆட்டோ டிரைவர் செந்தில் 41, திடீரென பிரேக் பிடித்தார்.
இதில் ஆட்டோ ஒருபக்கமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் செல்வராணி, தாரணி காயமடைந்தனர்.
பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தென்கரை போலீசார் ஆட்டோ டிரைவரிடம் விசாரிக்கின்ற னர்.--

