/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'அலாய் வீல்' களுடன் கார் டயர்கள் மாயம்
/
'அலாய் வீல்' களுடன் கார் டயர்கள் மாயம்
ADDED : டிச 17, 2024 04:35 AM

மூணாறு: மூணாறில் ஒர்க் ஷாப்பில் விடப்பட்ட காரில் 'அலாய் வீல்' களுடன் நான்கு டயர்கள் மாயமானதால் சென்னையை சேர்ந்த கார்த்திகேயன் நிர்கதியானார்.
அவர், மூணாறு அருகே தேவிகுளத்தில் வசிக்கும் நண்பரை காண காரில் வந்தார். அந்த கார் திடிரென பழுதடைந்ததால் மாட்டுபட்டி ரோட்டில் உள்ள ஒர்க் ஷாப்பில் சரி செய்ய விட்டார். ஒர்க் ஷாப் உரிமையாளர் பிஜூ நேற்று காலை காரை பார்த்த போது' அலாய் வீல்' களுடன் நான்கு டயர்களும் மாயமாகி இருந்தன. அதனால் அதிர்ச்சி அடைந்தவர் மூணாறு போலீசில் புகார் அளித்தார்.
அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு நடத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
கார் டயர்கள் மாயமானதால் கார்த்திகேயன் சென்னை திரும்ப இயலாமல் நிர்கதியாக உள்ளார்.