/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வளைகுடா நாடுகளில் இருந்து ஏலக்காய் ஆர்டர் துவக்கம்: விலை உயர வாய்ப்பு
/
வளைகுடா நாடுகளில் இருந்து ஏலக்காய் ஆர்டர் துவக்கம்: விலை உயர வாய்ப்பு
வளைகுடா நாடுகளில் இருந்து ஏலக்காய் ஆர்டர் துவக்கம்: விலை உயர வாய்ப்பு
வளைகுடா நாடுகளில் இருந்து ஏலக்காய் ஆர்டர் துவக்கம்: விலை உயர வாய்ப்பு
ADDED : நவ 13, 2024 11:31 PM
கம்பம்; வளைகுடா நாடுகளில் இருந்து ரம்ஜானுக்காக இந்திய ஏலக்காய் ஆர்டர்கள் துவங்கி உள்ளதால் நல்ல விலை கிடைக்கும் என ஏல விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கேரளா, இடுக்கி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு போட்டியாக குவாதிமாலா நாட்டில் ஏலக்காய் சாகுபடியாகிறது. அங்கு பராமரிப்பு செலவுகளின்றி மானாவாரி நிலங்களில் விளைவதால் விலை குறைவாக கிடைக்கும்.
இடுக்கி மாவட்டத்தில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் பாதிப்பு 40 முதல் 50 சதவீதம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது குவாதிமாலா நாட்டிலும் ஏலக்காய் மகசூல் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்திய ஏலக்காய்க்கு சர்வதேச மார்க்கெட்டில் நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மார்ச்சில் ரம்ஜான் வர இருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து இப்போதே ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்திருப்பதாக ஏலக்காய் மார்க்கெட்டிங் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அங்கு உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்திலும் இது பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காய் ஏற்றுமதியாளர் கூறுகையில் 'இந்தியாவிலும் குவாதிமாலாவிலும் ஒரே சமயத்தில் மகசூல் பாதிப்பு 40 சதவீதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையால் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. 2025 மார்ச்சில் சராசரி விலை கிலோவிற்கு ரூ.3500 கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குவைத் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆர்டர்கள் கிடைத்துள்ளது' என்றார்.