ADDED : நவ 25, 2025 01:30 AM
தேனி: பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி குடும்பத்தினருடன் காரில் சென்றவர்களை மறித்து கொலை மிரட்டல் விடுத்த மூன்று பேர் மீது போலீசார் விசாரிக்கின்றனர்.
பூதிப்புரம் வாழையாத்துப்பட்டி சிவக்குமார் 30. இவர் குடும்பத்தினருடன் காரில் சுடுகாடு வழியாக உள்ள ரோட்டில் சென்றார்.
அப்போது அதேப்பகுதி மூப்பர் தெரு குமார், ஆனந்த், ரேஷன்கடை தெரு போஸ் மூவரும் சிவக்குமார் ஓட்டிச் வந்த கார் செல்ல வழிவிடாமல் தடுத்து, ரோட்டில் உட்கார்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். சிவக்குமார், சற்று தள்ளி அமர்ந்து மது குடிக்கலாமே,' என்றார்.
இதில் ஆத்திரம் அடைந்த மூவரும் காரை விட்டு இறங்க விடாமல் தகராறில் ஈடுபட்டு, மதுகுடிக்க தண்ணீர் பற்றாக்குறையாகஉள்ளது. நீங்க கொடுங்க என கேட்டு தகராறில் ஈடுபட்டனர். சிவக்குமார் தனது தந்தையை அலைபேசியில் அழைத்தார்.
தாயும், தந்தையும்சம்பவ இடத்திற்கு வந்தனர். தாயை தாக்கி கீழே தள்ளி, சிவக்குமாரை தாக்கி காயப்படுத்தினர்.
பாதிக்கப்பட்டவர் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார், குமார், ஆனந்த், போஸ் ஆகிய மூவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

