/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இரவங்கலாறு, மணலாறு அணைகள் நிரம்புகின்றன
/
இரவங்கலாறு, மணலாறு அணைகள் நிரம்புகின்றன
ADDED : நவ 25, 2025 01:29 AM
சின்னமனூர்: கடந்த 48 மணி நேரமாக மேகமலையில் கனமழை பெய்வதால் இரவங்கலாறு, மணலாறு அணைகள் நிரம்பும் நிலையில் உள்ளது.
தேனி மாவட்டத்தில் 2 நாட்களாக சாரலாக துவங்கிய மழை நேற்று மதியத்திற்கு பின் கன மழையாக மாறியது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை கொட்டியது. மேகமலை பகுதியில் இரவங்கலாறு அணை பகுதியில் 80 மி.மீ.- மணவாறு பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. வனப்பகுதிக்குள் 100 மி.மீ. வரை மழை பதிவாகியிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
இரவங்கலாறு அணை கடல் மட்டத்தில் இருந்து உயரம் 1472 மீட்டராகும். இதில் 7 மீட்டர் ( 22.96 அடி ) அடி வரை தண்ணீர் தேக்க முடியும். தற்போது 6 மீட்டர் நீர் நிரம்பி உள்ளது . மணலாறு அணையின் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 1492 மீட்டராகும். இதில் 22 மீட்டர் ( 72 அடி ) வரை நீர் தேக்கலாம். தற்போது முழு அளவை எட்ட 2 மீட்டர் மட்டுமே தேவைப்படுகிறது. மழை தொடரும் பட்சத்தில் இன்று ( நவ. 25 ) இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டும் என்கின்றனர்.
முழு வீச்சில் மின் உற்பத்தி : தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், இரண்டு அணைகள் நிரம்பும் நிலையில் இருப்பதாலும் சுருளியாறு மின் நிலையத்தில் முழு திறனை பயன்படுத்தி 35 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

