/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேரட்டிற்கு கடும் கிராக்கி கட்டு ரூ.50க்கு விற்பனை
/
கேரட்டிற்கு கடும் கிராக்கி கட்டு ரூ.50க்கு விற்பனை
கேரட்டிற்கு கடும் கிராக்கி கட்டு ரூ.50க்கு விற்பனை
கேரட்டிற்கு கடும் கிராக்கி கட்டு ரூ.50க்கு விற்பனை
ADDED : அக் 18, 2025 04:28 AM

மூணாறு: செடியுடன் விற்கப்படும் கேரட்டை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்குவதால் கடும் கிராக்கி நிலவுகிறது.
சுற்றுலா பகுதிகளை பொறுத்து சில பொருட்களுக்கு மவுசு அதிகம் காணப்படும். மலை பகுதிகளை பொறுத்தவரை, அப்பகுதிகளில் விளையும் காய்கறி, பழங்கள் போன்றவை சுற்றுலா பயணிகள் பெரிதும் விடும்புவர். மூணாறு பகுதியில் தழையுடன் விற்கப்படும் கேரட்டை பயணிகள் அதிக ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். ஆரஞ்ச் நிறத்திலான கேரட் பசுமையான தழையுமாக ரோட்டோரங்களில் வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ஈர்க்கப்படுகின்றனர். அவற்றை பலரும் வாங்கி செல்வதால் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. சிலர் சொந்தமாக சாகுபடி செய்து விற்கும் நிலையில் எல்லபட்டி, வட்டவடை ஆகிய பகுதிகளில் பெரும் அளவில் கேரட் சாகுபடி நடக்கிறது. 5 காரட் கொண்ட ஒரு கட்டு ரூ.50க்கு விற்கப்படுகிறது. தற்போது காய்கறி மார்க்கெட்டில் தழை இன்றி கேரட் ஒரு கிலோ ரூ.50 க்கு விற்கப்படுகிறது. அதன் விலை குறைந்தாலும் தழையுடன் எப்பொழுதும் ரூ.50க்கு விற்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.