/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் தடுப்புச் சுவரின்றி விபத்து அபாயம்
/
ரோட்டில் தடுப்புச் சுவரின்றி விபத்து அபாயம்
ADDED : அக் 18, 2025 04:27 AM

கூடலுார்: கூடலுார் வாரச்சந்தை பகுதியில் இருந்து தாமரைக்குளம் நுனிக்கரை வரை தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு பகுதிகளிலும் கழிவு நீரோடை உள்ளது. குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அதிகமாக இவ் வழியாகச் செல்கிறது. பல இடங்களில் கழிவு நீருடன் மழை நீரும் அதிகம் செல்வதால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல் போக நெல் சாகுபடிக்கான அறுவடை பணி துவங்க உள்ளது. நெற்கதிர்கள் மற்றும் நெல் மூடைகளை கனரக வாகனங்கள் மூலம் ஏற்றி வரப்படும். ரோட்டின் ஒரு பகுதியில் தடுப்புச் சுவர் இன்றி மண் அரிப்பும் ஏற்பட்டுள்ளதால் மிகப்பெரிய விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் நெல் அறுவடை தீவிரமடைவதற்கு முன் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.