நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி அருகே எரணம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் அசோக் தயாளன் 30. இவர் வீட்டின் அருகே பால்சாமி என்பவர் வீடு கட்டுவதற்காக குழி தோண்டி உள்ளார். உங்களது இடத்தில் வீடு கட்டுங்கள் என அசோக் தயாளன் கூறி உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பால்சாமி இவரது மனைவி காமாட்சி, மகன்கள் வீரக்குமார், பிரவீன் குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து அசோக் தயாளனை மண் வெட்டியால் அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். புகாரில் போடி தாலுாகா போலீசார் பால்ச்சாமி, காமாட்சி உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.