UPDATED : அக் 18, 2026 05:38 PM
ADDED : அக் 18, 2026 05:34 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம்: பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி தெற்கு தெரு சின்னச்சாமி 35.
இவர் மீது கொலை மிரட்டல், அடிதடி வழக்கு தென்கரை போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை பெரியகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிமன்றம் விசாரணைக்கு சின்னச்சாமி ஆஜராகாமல் தலைமறைவாகினார். நீதிமன்றம் சின்னச்சாமி மீது பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தது. தென்கரை போலீஸ் சுராஜ் புகாரில் சின்னச்சாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
