ADDED : செப் 29, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
பெரியகுளம், செப். 30-
பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி பெருமாள் கோயில் தெரு முருகன் 52. இவரது மகன் கவுதம் 23. இருவரும் டூவீலரில் மது பாட்டில்கள் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் சென்றது. வடகரை எஸ்.ஐ., ஜான்செல்லத்துரை தேடி சென்றபோது முருகன், கவுதம் டூவீலரை நிறுத்தி விட்டு தப்பினர். போலீசார் இரு டூவீலர்கள், 31 மது பாட்டில்களை கைப்பற்றினர். இருவரையும் தேடி வருகின்றனர்.
--
