ADDED : செப் 29, 2026 07:02 PM
பெரியகுளம், செப். 30-
பெரியகுளம் அழகர்சாமிபுரத்தைச் சேர்ந்த மோகன் மகள் திவ்யா 24. உடல் நலம் பாதித்து உறவினர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு நேற்று அழைத்து வந்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர், திவ்யா இறந்ததாக தெரிவித்தார். உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்க வேண்டும் என ஒரு தரப்பினரும், பரிசோதனை செய்ய மற்றொரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில் பிரேத பரிசோதனை செய்திட முடிவு செய்து உடலை தேனி மருத்துவக்கல்லூரிக்கு அனுப்புவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என உறவினர்கள் மருத்துவமனை முன்பு ரோடு மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., நல்லு,தென்கரை எஸ்.ஐ.,வேல் மணிகண்டன் பேச்சுவார்த்தை நடத்தினர். பெரியகுளம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
--
