/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கோயில் அறங்காவலரை தாக்கியதாக இணை ஆணையர் மீது வழக்கு இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்கு
/
கோயில் அறங்காவலரை தாக்கியதாக இணை ஆணையர் மீது வழக்கு இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்கு
கோயில் அறங்காவலரை தாக்கியதாக இணை ஆணையர் மீது வழக்கு இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்கு
கோயில் அறங்காவலரை தாக்கியதாக இணை ஆணையர் மீது வழக்கு இரு தரப்பிலும் 10 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 23, 2024 05:48 AM
தேனி: குச்சனுார் கோயில் அறங்காவலரை தாக்க துாண்டியதாக திண்டுக்கல் இணை ஆணையர்,செயல் அலுவலர் ,தக்கார் உட்பட 6 பேர் மீதும், கோயில் காவலரை தாக்கி ரூ.1.50 லட்சத்தை எடுத்து சென்றதாக 4பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
குச்சனுாரை சேர்ந்தவர் திருமலைமுத்து 67. இவர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோயிலின் பரம்பரை அறங்காவலராக பல ஆண்டுகளுக்கு முன் இருந்தார். கோயில் நிர்வாகத்தை சில ஆண்டுகளுக்கு முன் ஹிந்து அறநிலையத்துறை எடுத்தது. பரம்பரை அறங்காவலர்கள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து, அதில் 'கோயில் நிர்வாகத்தை பரம்பரை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்'என தீர்ப்பு பெற்றனர். அறநிலைய துறை அதிகாரிகள் அப்பீல் செய்துள்ளதாக தெரிவித்து பொறுப்பை ஒப்டைக்க மறுத்தனர்.
பிப்., 19 ல் பரம்பரை அறங்காவலர் குழுவினர், திருமலைமுத்துவை தலைவராக தேர்ந்தெடுத்தாகவும், அதன் அறிவிப்பு நோட்டீசை பிப்.21ல் கோயில் சுவற்றில் ஒட்ட சென்றனர். அப்போது திண்டுக்கல் அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி, செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் மாரிமுத்து துாண்டுதலில், கோயில் ஊழியர்கள் மாரிச்சாமி, லட்சுமணன், சிவக்குமார் ஆகிய மூவர், திருமலைமுத்துவின் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தாக திருமலைமுத்து புகாரில் சின்னமனார் போலீசார், இணை ஆணையர் பாரதி, செயல் அலுவலர் நாகராஜன், தக்கார் மாரிமுத்து உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கோயில் காவலர் மாரிச்சாமி புகாரில், திருமலை முத்து, அவரது மகன் தீபன் மற்றும் நால்வர் தாக்கி ரூ.1.50 லட்சம் பணத்தை எடுத்து சென்றதாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.