/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
/
அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
ADDED : அக் 31, 2024 03:02 AM
தேனி: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பேரையூர் ரோடு ரவிச்சந்திரன் 58. இவர் தேனி மாவட்டம் கம்பம் பணிமனை 1ல் அரசு பஸ் டிரைவர்.
அக்.29ல் காலை 7:20 மணிக்கு கம்பம் -- மதுரை செல்லும் அரசு பஸ்சை வீரபாண்டிக்கு ஓட்டி வந்தார். அப்போது வீரபாண்டி ஒத்தவீட்டை சேர்ந்த விவசாயி முத்து, ஒத்தவீடு அருகே பஸ்சை நிறுத்தினார். பஸ்சின் முன்பக்க கதவு திறக்காததால் ஆத்திரம் அடைந்த முத்து, தகாத வார்த்தைகளால்டிரைவரை திட்டினார்.
பின் பஸ்சிற்குள் சென்று செருப்பால் டிரைவரை தாக்கி, அரசு பணி செய்ய விடாமல் தடுத்தார். பாதிக்கப்பட்ட டிரைவர் ரவிச்சந்திரன், வீரபாண்டி போலீசில் புகார் அளித்தார்.
முத்து மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தாக்கியதாக வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.