ADDED : பிப் 18, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: உத்தமபாளையம் ஒடைக்குளம் ஜெசிந்தா 45. இவரது மகள் ஜெர்மஜலாவிற்கும் இவரது உறவினர் திருநெல்வேலி பிரான்சிஸ் லியோனார்டு என்பவருக்கும் 2022ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கருத்து வேறுபாடால் திருமணம் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக ஜெசிந்தா தேனி கலெக்டரிடம் மனு அளித்தார். அதற்கான இரு குடும்பத்தார் விசாரணை முடிந்து கலெக்டர் அலுவலக வளாக டீக்கடையில் நின்றிருந்தார். அங்கு வந்த பிரான்சிஸ் லியோனார்டு சகோதரர் செரில்திவ்ராஜ் 25, ஜெசிந்தாவை அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து தாக்கினார். காயமடைந்தவர் சிகிச்சைக்காக தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் செரில்திவ்ராஜ் மீது தேனி போலீசார் வழக்கு பதிந்தனர்.