/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்ற பணியாளரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு
/
நீதிமன்ற பணியாளரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு
நீதிமன்ற பணியாளரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு
நீதிமன்ற பணியாளரை அரசு பணி செய்யவிடாமல் தடுத்தவர் மீது வழக்கு
ADDED : பிப் 18, 2024 05:12 AM
பெரியகுளம்: நீதிமன்றத்தில் அரசு பணியை செய்ய விடாமல் பெண் பணியாளரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியவர் மீது வழக்கு
தேனி கூடுதல் மாவட்ட விரைவு நீதிமன்றம் பெஞ்ச் கிளார்க் கார்த்திகை செல்வி. அவருடன் பணிபுரியும் இளநிலை உதவியாளர் உதயகுமார், பதிவுரு எழுத்தர் ஆண்டாள் ஆகியோருடன் பணியில் இருந்தார். நீதிமன்றத்தில் சிவில் வழக்கு சம்பந்தமாக சென்னை வன்னுவம்பேட்டை தாமரைக்கண்ணன் ஆஜராகி வாதிட்டார்.
இந்நிலையில் கார்த்திகை செல்வியிடம், தாமரைக்கண்ணன் ' நேற்று போட்ட உத்தரவு எனக்கு எதிராக நீங்கள் தான் நீதிபதியிடம் எழுதிக் கொடுத்து அதில் நீதிபதி கையெழுத்து பெற்றதாகவும்' எனக்கு எதிராக நீங்கள் வழக்கில் உத்தரவு எவ்வாறு பிறப்பித்தீர்கள் என கார்த்திகை செல்வியிடம் அரசு பணியை செய்ய விடாமல் இடையூறாக செய்து முரண்பாடாக பேசியுள்ளார்.
இதனால் கார்த்திகை செல்வி மன உளைச்சலுக்கு ஆளானார். கார்த்திகை செல்வி புகாரில் தென்கரை எஸ்.ஐ., அழகுராஜா தாமரைக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்தார்.