ADDED : பிப் 17, 2024 06:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே டி.சுப்பலாபுரத்தைச் சேர்ந்த நெசவாளர் முனிராஜ், கைத்தறியில் நெசவு செய்ய வேண்டிய காட்டன் ரக சேலையை விசைத்தறியில் கூடுதல் பாவு இழைகளுடன் நெசவு செய்துள்ளார்.
மதுரை கைத்தறி ரக ஒதுக்கீடு உதவி அமலாக்க அலுவலர் வரதராஜன் ஆய்வு மேற்கொண்ட போது விசைத்தறியில் நெசவு செய்வது தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரில் ஆண்டிபட்டி எஸ்.ஐ., சுமதி முனிராஜ் மீது கைத்தறி ரக ஒதுக்கிடு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.