/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு
/
திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு
திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு
திருவிழாவில் போலீஸ்காரரை தாக்கிய 13 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 13, 2025 07:15 AM
போடி : ராசிங்காபுரம் கோயில் திருவிழாவில் தகராறை தடுக்க சென்ற போலீஸ்காரர் சுதாகர் 42, யை தாக்கிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
போடி அருகே ராசிங்கபுரத்தில் முத்து மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. முளைப்பாரி ஊர்வலத்தில் ராசிங்காபுரத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், மணிமுத்து என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சுதாகர் சமாதானம் செய்துள்ளார். முடியாத நிலையில் ரவிச்சந்திரன், குமரன், நவீன் அழகுராஜா, யுவராஜாவும், மணிமுத்து மற்றும் சிலரும் ஒன்று கூடி கம்பு, கட்டையுடன் சண்டை போட முயன்றனர். இதனால் சுதாகர் விழாவை நிறுத்த விழா கமிட்டியிடம் கூறி உள்ளார்.
இதனை கேட்காமல் கீர்த்திக் பாண்டியன், சரவண பாண்டியன், மோனீஸ் பாண்டியன் ஆகியோர் போலீசாரை தகாத வார்த்தை திட்டி அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து, அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர். இதனை தடுக்க சென்ற எஸ்.ஐ., விஜய்யை,' போலீசார் ஊருக்குள் வரக்கூடாது, வந்தால் கட்டையால் அடித்து கொலை செய்து விடுவோம்,' என மிரட்டி உள்ளனர்.
போலீஸ்காரர் சுதாகர் புகாரில் போடி தாலுகா போலீசார் ரவிச்சந்திரன், கீர்த்தி பாண்டியன், சரவண பாண்டியன், மோனீஸ் பாண்டியன், மணிமுத்து, சேகர் உட்பட 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

