/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண்ணிடம் தகராறு 3 பேர் மீது வழக்கு
/
பெண்ணிடம் தகராறு 3 பேர் மீது வழக்கு
ADDED : அக் 05, 2025 04:24 AM
பெரியகுளம் : பெரியகுளம் நேருநகர் ஜெ.கே.காலனியைச் சேர்ந்தவர் கோமதி 41.
இவரது கணவர் சரவணன், 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனது இரு மகன்கள், ஒரு மகளுடன் கூலி வேலை செய்து பிள்ளைகளை கோமதி பார்த்துக் கொள்கிறார். அதே பகுதியைச் சேர்ந்த அசோக் அடிக்கடி மதுபோதையில் கோமதி குடும்பத்தாரிடம் பிரச்னை செய்துள்ளார். இந்நிலையில் மதுபோதையில் கோமதி மீது மோதுவது போல் சென்றுள்ளார். இதனை தட்டிக்கேட்ட கோமதியின் மகன் மகேசை கத்தியால் அசோக் குத்தினார். அசோக் சகோதரர்கள் விஜய், சதீஷ் ஆகியோர் கோமதியின் இளைய மகன் மனோஜ், மகள் ஆகியோரை அவதூறாக பேசி அடித்தனர். பெரியகுளம் அரசு மருத்துவமனையில் மகேஷ் சேர்க்கப்பட்டார். வடகரை எஸ்.ஐ., விக்னேஷ் அசோக் உட்பட மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.