ADDED : அக் 05, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கம்மவார் சங்கம் ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு விழா நடந்தது. சங்க துணைத்தலைவர் பாண்டியராஜ் தலைமை வகித்தார். சங்க தலைவர் நம்பெருமாள்சாமி மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினார்.
விழாவில் சங்க செயலாளர் மகேஷ், பொருளாளர் ரங்கராஜ், இணைச்செயலாளர் ராஜாமன்னார். ஐ.டி.ஐ., செயலாளர் பெருமாள்சாமி, இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், ஐ.டி.ஐ., முதல்வர் பிரகாசம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி: அரசு ஐ.டி.ஐ.,யில் பட்டமளிப்பு விழா ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாணவர் பேரவை செயலாளர் திருலோகசந்தர், நிர்வாகிகள் பாஸ்கரன், கண்ணன், கவுதர்யா தஸ்தகீர் உள்ளிட்டோர் பயிற்சியாளர்களுக்கு பட்டங்கள் வழங்கினர். ஒவ்வொரு தொழிற் பிரிவிலும் முதல் 3 இடங்களை வென்றவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டது.