/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கடனை திருப்பி கேட்டவருக்கு அடி : 3 பேர் மீது வழக்கு
/
கடனை திருப்பி கேட்டவருக்கு அடி : 3 பேர் மீது வழக்கு
கடனை திருப்பி கேட்டவருக்கு அடி : 3 பேர் மீது வழக்கு
கடனை திருப்பி கேட்டவருக்கு அடி : 3 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 20, 2025 05:06 AM
சின்னமனூர்: ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசிப்பவர் முருகன் 62, இவர் இதே பகுதியில் வசிக்கும் சுருளி முத்து 43 என்பவர் ரூ.30 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனை திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார். ஓடைப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த சுருளி முத்துவிடம், முருகன் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுருளிமுத்து மற்றும் அவருடன் இருந்த முத்தழகு 47, ஈஸ்வரன் 45 ஆகியோர் சேர்ந்து முருகனை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் முருகனுக்கு தலை, நெற்றியில் ரத்த காலம் ஏற்பட்டது. ஓடைப்பட்டி போலீசார் 3 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.