/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
/
வியாபாரியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 20, 2025 04:48 AM
கடமலைக்குண்டு : கடமலைக்குண்டை சேர்ந்தவர் அழகர்ராஜா 47, இவர் கேரளாவில் இருந்து பலாப்பழம் வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் கேரளாவில் இருந்து பலாப்பழம் வாங்கி சரக்கு வாகனத்தில் கடமலைக்குண்டு கொண்டு வந்துள்ளார்.
அவருக்கு உதவியாளராக ஜெயபால் இருந்துள்ளார். ஜெயபால் என்பவருடன் கடமலைக்குண்டை சேர்ந்த செல்வம் அவரது மனைவி செல்வி மகன் விஜய் ஆகியோர் தகராறு செய்து அவருக்கு எதற்கு பலாப்பழம் வெட்டி கொடுக்கிறாய் என்று கேட்டுள்ளனர். தகராறில் மூவரும் ஜெயபாலை தாக்கியுள்ளனர்.
விலக்கி விடச் சென்ற அழகராஜாவுக்கு காயம் ஏற்பட்டதால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அழகர் ராஜா புகாரில் செல்வம், செல்வி, விஜய் ஆகியோர் மீது கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.