/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விரல் துண்டித்த 4 பேர் மீது வழக்கு
/
விரல் துண்டித்த 4 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 17, 2025 11:49 PM
பெரியகுளம்: பெரியகுளம் அருகே கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் 43. அதே பகுதியில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இதே ஊர் கூர்மையா கோயில் தெருவைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது நண்பர்களுடன் கோயிலுக்கு செல்லும் ரோட்டில் மது குடித்தனர்.
இதனை பெருமாள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தட்டி கேட்டுள்ளனர். இந்த முன் விரோதத்தால் பஞ்சர் கடைக்கு வந்த ராஜ்குமார் மற்றும் மூன்று பேர், பெருமாளை அடித்துள்ளனர். ராஜ்குமார் அரிவாளால் பெருமாளை வெட்ட முயன்ற போது தடுத்தார். இதில் பெருமாள் இடது கை ஆள்காட்டி விரல் துண்டானது. அங்கு தடுக்க வந்த பெருமாள் மருமகன் தமிழ்செல்வனுக்கும்வெட்டு விழுந்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தென்கரை போலீசார் வழக்கு பதிந்து ராஜ்குமார் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.