/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜாதியை கூறி பேசியதாக வங்கி மேலாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
/
ஜாதியை கூறி பேசியதாக வங்கி மேலாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
ஜாதியை கூறி பேசியதாக வங்கி மேலாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
ஜாதியை கூறி பேசியதாக வங்கி மேலாளர் உட்பட 5 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 17, 2025 11:57 PM
பெரியகுளம்: பெரியகுளம் கனரா வங்கியில் மகளிர் சுய உதவிக் குழு கடன் கேட்டு விண்ணப்பித்த பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை ஜாதியை கூறி அவதூறாக பேசிய மேலாளர் கவிதா உட்பட பணியாளர்கள் 5 பேர் மீது வடகரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பெரியகுளம் எ.புதுக்கோட்டை நேருநகரைச் சேர்ந்த பாலசிங்கம் மனைவி பிரபா 30. இவரும் இதே பகுதியைச் சேர்ந்த விவசாய கூலிகள் 12 பேர் இணைந்து, சுவாதி மகளிர் சுய உதவிக் குழு துவங்கினர்.
வாடகை இடத்தில் சிறிய அளவில் சுய தொழில் ஆரம்பித்துள்ளனர். பெரியகுளம் கனரா வங்கியில் சுயதொழிலுக்கு கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்துள்ளனர். கனரா வங்கி மேலாளர் கவிதா சுயஉதவிக்குழு பெயர், அதிலுள்ள உறுப்பினர்கள் பெயரில் தனித்தனியாக கணக்கு துவங்க வேண்டும் என தெரிவித்தார். இதனையடுத்து பிரபாவும் வங்கி கணக்குகளை துவக்கி
ஆவணங்களை வங்கியில் கொடுத்துள்ளனர். மேலாளர் கவிதாவிடம் கடன் வழங்குவது குறித்து கேட்டுள்ளார். அதற்கு கவிதா, வங்கி ஏஜன்ட் கண்ணனிடம் தொடர்பு கொள்ளுங்கள் என கூறியுள்ளார். கண்ணன் கடன் வழங்குவதற்கு ரூ.12 ஆயிரம் தரவேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து 2024 செப்., 25ல் பிரபா, மேலாளரிடம் முறையிட்டார். இதற்கு மேலாளர் மற்றும் பணியாளர்கள் சுதா, சந்தீப், சுனில், கண்ணன் ஆகியோர், 'இதற்குத்தான் நாங்கள் பட்டியலின சமூகத்தை சார்ந்த மகளிர் சுய உதவிக் குழுவிற்கு கடன் வழங்குவதில்லை', என அவதூறாக பேசியுள்ளனர்.
பிரபா தேனி எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் தற்போது வடகரை இன்ஸ்பெக்டர் கீதா, மேலாளர் கவிதா உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.-