/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாணவிக்கு கொலை மிரட்டல் காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு
/
மாணவிக்கு கொலை மிரட்டல் காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு
மாணவிக்கு கொலை மிரட்டல் காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு
மாணவிக்கு கொலை மிரட்டல் காதலன் உள்பட 5 பேர் மீது வழக்கு
ADDED : டிச 01, 2024 07:15 AM
தேனி : தேனியை சேர்ந்த கல்லுாரி மாணவி அவரது உறவினர் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.
இவர் போடி முனிசிபல் காலனிதெரு சந்துருபிரகாஷ்யை காதலித்தார். இந்நிலையில் காதலனுக்கு அவரது தாய்மாமன் விருதுநகர் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் காளிச்சரண் மகளை திருமணத்திற்கு பேசி முடித்தனர்.
காதல் விஷயம் அறிந்த சந்துரு பிரகாஷின் பெற்றோர் சுந்தரபாண்டியன், மாரியம்மாள், உறவினர் காளிச்சரண், இவரது மனைவி சுவேதா, மற்றொருவர் என 5 பேரும் இணைந்து மாணவிக்கு கொலைமிரட்டல் விடுத்தனர். மாணவி தேனி எஸ்.பி., சிவபிரசாத்திடம் புகாரளித்தார்.
அதன் பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் காதலன் சந்துருபிரகாஷ், அவரது பெற்றோர், உறவினர்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிந்தனர்.