/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்செய்த 63 பேர் மீது வழக்கு
/
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்செய்த 63 பேர் மீது வழக்கு
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்செய்த 63 பேர் மீது வழக்கு
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்செய்த 63 பேர் மீது வழக்கு
ADDED : ஜன 18, 2025 07:08 AM
ஆண்டிபட்டி, : கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ரோடு மறியல் செய்த 63 பேர் மீது வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி - முதலக்கம்பட்டி ரோட்டில் வைகை ஆற்றுப்பாலம் அருகே புதிதாக கல்குவாரி செயல்படுகிறது.
இப்பகுதியில் விளைநிலங்கள் அதிகம் இருப்பதால் விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று முன் தினம் குவாரியில் வெடி வைத்து கற்களை உடைத்த போது முதலக்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயி லட்சுமணன் 51, அதனை படம் பிடித்து வெடி வெடிப்பதை தட்டி கேட்டுள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் லட்சுமணனை குவாரியில் வைத்து அடித்து காயப்படுத்தினர்.
முதலக்கம்பட்டியை சேர்ந்த பலர் ஒன்றுகூடி வைகை ஆற்றுப் பாலம் அருகே கல்குவாரி உரிமையாளர் செல்லப்பாண்டியை கண்டித்து ரோடு மறியல் செய்தனர்.
கூடுதல் எஸ்.பி., சுகுமார், ஆண்டிபட்டி டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.
சம்பவம் குறித்து வைகை அணை எஸ்.ஐ., சவரியம்மாள்தேவி முதல்லக்கம்பட்டியை சேர்ந்த வாசகர் 59, சென்றாயன் 55, மணிகண்டன் 51 உட்பட 40 ஆண்கள், 20 பெண்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.