/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தகராறில் 8 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
/
தகராறில் 8 பேர் மீது வழக்கு: ஒருவர் கைது
ADDED : அக் 24, 2025 02:50 AM
போடி: போடியில் இருதரப்பினர் இடையே நடந்த தகராறில் 8 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
போடி போயன்துறை ரோட்டில் வசிப்பவர் சுரேஷ் 42. இவர் இரட்டை வாய்க்கால் அருகே உள்ள பாரில் மது குடித்து விட்டு வெளியேறினார். அப்போது சுப்புராஜ் நகர் கண்ணன் 41, வேறு நபருடன் தகராறில் ஈடுபட்டு இருந்தார்.
இதனை கண்ட சுரேஷ், சண்டையிட வேண்டாம் எனக்கூறினார். ஆத்திரம் அடைந்த கண்ணன் சுரேஷை கைகளால் தாக்கிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். அதன்பின் கண்ணன், அணைக்கரைப் பட்டி நல்லதம்பி உட்பட ஏழு பேர் கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுரேஷ் வீட்டிற்கு சென்று, கொலை மிரட்டல் விடுத்தனர்.
பாதிக்கப்பட்ட சுரேஷ் புகாரில் போடி டவுன் போலீசார் நல்லதம்பி உட்பட 7 பேர் மீது வழக்கு பதிந்து, கண்ணனை கைது செய்தனர்.இப்பிரச்னையில் சுப்புராஜ் நகர் கண்ணன், தனது நண்பர் அருண்பாண்டியனுடன் மது குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அருண் பாண்டியனுக்கும் அருகே இருந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது நண்பர்கள் இருவரையும் போயன்துறையை சேர்ந்த சுரேஷ் தகாத வாத்தைகளால் திட்டி, தாக்கினார். கண்ணன் புகாரில் சுரேஷ் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

