/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குமுளியில் ரோட்டில் தேங்கும் மழை நீரால் வியாபாரம் பாதிப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் சங்கம் முடிவு

ADDED : அக் 24, 2025 02:50 AM

கூடலுார்: குமுளியில் ரோட்டில் தேங்கும் மழை நீரால் வியாபாரம் பாதிக்கப்படுவதால் போராட்டம் நடத்த வியாபாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
கேரளா குமுளி வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. அருகில் தேக்கடி இருப்பதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகின்றனர்.
இதனால் குமுளியில் ஸ்டார் ஓட்டல்கள், லாட்ஜ்கள், ஏலம் மிளகு உள்ளிட்ட நறுமணப் பொருள்கள் விற்பனை மையங்கள், துணிக்கடைகள் என அதிகம் உள்ளன.
சுற்றுலாப் பயணிகளை நம்பி ஏராளமான வியாபாரிகள் குமுளியில் உள்ளனர். மழை பெய்யும் போது வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள குமுளி மெயின் பஜாரில் மழை நீர் வெளியேறாமல் ரோட்டிலேயே குளம் போல் தேங்கும் நிலை பல மாதங்களாக உள்ளது.
சமீபத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையில் கடைகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தி உள்ளன. வியாபாரிகள் பலமுறை பஜாரில் தண்ணீர் தேங்காதவாறு வெளியேற்றுவதற்கான நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறி வந்தனர்.
இதுவரை அதற்கான நடவடிக்கை இல்லை. விற்பனை அதிகம் பாதிக்கப்படுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.