/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல் பயிருக்கு நவ.15க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
/
நெல் பயிருக்கு நவ.15க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
நெல் பயிருக்கு நவ.15க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
நெல் பயிருக்கு நவ.15க்குள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
ADDED : அக் 24, 2025 02:50 AM
தேனி: மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ளுமாறு வேளாண் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
பருவமழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட நிகழ்வுகளால் பயிர் இழப்புகள் ஏற்பட்டால் காப்பீடு செய்திருந்தால் விவசாயிகள் இழப்பீடு பெற இயலும். அதனால் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு காப்பீடு செய்வது அவசியமாகும். நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவ.15 கடைசி நாளாகும். ஒரு ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகை ரூ.38 ஆயிரத்து 38 ஆகும்.
அதற்கு பிரிமியம் தொகையாக விவசாயிகள் ரூ.570.57 செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என, வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.