/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சொத்து பிரச்னையில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
/
சொத்து பிரச்னையில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
சொத்து பிரச்னையில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
சொத்து பிரச்னையில் தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு
ADDED : ஜூன் 15, 2025 06:59 AM
பெரியகுளம், பெரியகுளம் அருகே வடுகபட்டி தெலுங்கர் தெருவைச் சேர்ந்தவர் திருப்பதிகண்ணன் 46. அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மூத்த அண்ணன் கணேசன் கடந்த மாதம் 8 ம்தேதி இறந்தார்.
இதற்காக திருப்பதி கண்ணன் அவரது மகள் யாழினியுடன் வடுகபட்டிக்கு வந்தார். துக்கநிகழ்வுகள் முடிந்த நிலையில் ஜூன் 11 இரவில் வீட்டிலிருந்த திருப்பதி கண்ணனை, மற்றொரு அண்ணன் முருகன், அவரது மகன் பாலசுப்பிரமணி, மனைவி தேவி ஆகியோர் ,'சொத்து கேட்கவா இங்கு வந்தாய், ஒழுங்கா அமெரிக்கா போய்விடு,' என அவதூறாக பேசிஅடித்துள்ளனர்.மேலும் முருகன், பாலசுப்பிரமணி ஆகியோர் கல்லால் திருப்பதி கண்ணனை அடித்து காயப்படுத்தினர். போலீசார் முருகன் உட்பட மூன்று பேர் மீது வழக்கு பதிவுசெய்தனர்.-