/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மின் திருட்டு ஆய்வுக்கு சென்ற அலுவலர்களை தாக்கி மிரட்டல் தேனி அருகே தம்பதி மீது வழக்கு

ADDED : ஆக 20, 2025 11:10 PM
ஆண்டிபட்டி:தேனி மாவட்டம் கோம்பைத்தொழு கிராமத்தில் மின் திருட்டு ஆய்வுக்குச் சென்ற மின்வாரிய அலுவலர்களை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த பாலகிருஷ்ணன், மனைவி வசந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மின்வாரியத்தில் தேனி மதுராபுரி பிரிவில் மின் திருட்டு தடுப்புக் குழு அலுவலராக கோகுல கண்ணன் 50, உள்ளார். கடமலைக்குண்டு மின் பிரிவில் தவறுகள் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் அவர் சக பணியாளர்களான சுப்புராம், சரவணன், சிவா ஆகியோருடன் கோம்பைத்தொழு கிராமத்தில் அழகாதேவர் என்ற பெயரில் உள்ள வணிக மின் இணைப்பு குறித்து, அங்குள்ள கடையில் ஆய்வு செய்வதற்காக சென்றனர்.
அக்கிராமத்தைச்சேர்ந்த பாலகிருஷ்ணன், மனைவி வசந்தி ஆகியோர், 'தங்கள் கடைக்குள் யாரும் வரக்கூடாது' என, தகாதவார்த்தைகளை கூறி திட்டினர். வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் கோகுலகண்ணனை கைகளால் தாக்கி கீழே தள்ளினர். தடுக்கச் சென்ற சரவணனையும் தாக்கினர். அங்கிருந்தவர்கள் அவர்களை விலக்கி விட்டனர். கடைக்குள் இருந்த பாலகிருஷ்ணன், 'அரிவாளை காட்டி கடைக்குள் வந்தால் வெட்டி விடுவேன்' என கொலை மிரட்டல் விடுத்தார். தம்பதி மீது மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.