/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆவணங்கள் தொலைந்ததாக போலீசை ஏமாற்றி சான்று ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி மீது வழக்கு

ADDED : டிச 23, 2024 05:41 AM
தேனி: தேனியில் நிலத்தை வாங்க முன்பணம் ரூ.12 லட்சம் வழங்கியவர் இறந்ததும், அந்த நிலத்தின் ஆவணங்கள் தொலைந்ததாக போலீசை ஏமாற்றி சான்றிதழ் பெற்று, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்ற தம்பதி மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேலக்கூடலுார் பூச்சியப்பத்தேவர் தெரு ரமேஷ். இவருக்கு சொந்தமாக 16 சென்ட் நிலம் உள்ளது. இதனை தனது தங்கை கவிநயாவின் கணவரான நாராயணத்தேவன்பட்டி கவிநாத்துக்கு விற்க ரூ.18 லட்சத்திற்கு கிரைய உடன்படிக்கை செய்தனர். கவிநாத் 2022ல் ரூ.12 லட்சத்தை முன்பணமாக ரமேஷிடம் வழங்கினார். கிரைய உடன்படிக்கை, அசல் ஆவணங்கள் கவிநாத்திடம் இருந்தன. இந்நிலையில் கவிநாத் கடந்த ஜனவரியில் நடந்த வாகன விபத்தில் இறந்தார். அதன் பின், குறிப்பிட்ட நிலத்தின் ஆவணங்களை நகல் எடுத்தபோது, 'காணவில்லை' என, பழனிசெட்டிபட்டி போலீசில் ஆன்லைன் மூலம் ரமேஷ் புகார் அளித்தார்.
போலீசாரை ஏமாற்றி சான்றிதழ்
போலீசார் விசாரணையில் உண்மைகளை கூறாமல் ரமேஷ் ஏமாற்றினார். தொடர்ந்து போலீசாரிடமிருந்து சான்றிதழ் பெற்றார். இதனை வைத்து ஏற்கனவே கிரைய உடன்படிக்கை செய்த 16 சென்ட் நிலத்திற்கு ரமேஷ், அவரது சகோதரி கவிநயா இணைந்து போலியாக ஆவணங்கள் தயாரித்து சுருளிபட்டியை சேர்ந்த கண்ணன் மனைவி வாணிக்கு நிலத்தை விற்றனர்.
இந்த விபரங்கள் இறந்த கவிநாத்தின் மனைவி திவ்யாவிற்கு தெரிந்தது. அவரது புகாரில் ரமேஷ், அவரது மனைவி கவிநயா ஆகியோர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.