/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
200 அடி பள்ளத்தில் விழுந்த பெண் புகாரில் டிரைவர்கள் மீது வழக்கு
/
200 அடி பள்ளத்தில் விழுந்த பெண் புகாரில் டிரைவர்கள் மீது வழக்கு
200 அடி பள்ளத்தில் விழுந்த பெண் புகாரில் டிரைவர்கள் மீது வழக்கு
200 அடி பள்ளத்தில் விழுந்த பெண் புகாரில் டிரைவர்கள் மீது வழக்கு
ADDED : பிப் 18, 2024 05:14 AM
தேவதானப்பட்டி: டம்டம் பாறை விபத்திற்கு பஸ், லாரி டிரைவர்களின் அஜாக்கிரதையே காரணம் என 200 அடி பள்ளத்தில் இருந்து காயத்துடன் மீட்கப்பட்ட பெண் புகாரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கொடைக்கானல் அடிவாரம் டம்டம் பாறை கொண்டை ஊசி வளைவில் நேற்று முன்தினம் லாரி மோதிய விபத்தில் பஸ்சில் பயணித்த பெரியகுளத்தைச் சேர்ந்த நித்யா 32. முன்புறம் கண்ணாடிய உடைத்து 200 அடி பள்ளத்தில் விழுந்து காயமடைந்தார்.
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் புகாரில்,
நான் பயணித்த பஸ்சை தாண்டிக்குடியைச் சேர்ந்த டிரைவர் இளங்கோவன் 33. ஓட்டினார்.
இவர் பஸ்சில் இருந்த பயணிகளிடம் அஜாக்கிரதையாக பேசிக்கொண்டே அதிவேகமாக ஓட்டினார். எதிர்புறம் லாரி டிரைவர் அஜாக்கிரதையாக ஓட்டி வந்து மோதினார். இதனால் விபத்து நடந்து பலத்த காயமடைந்ததாக தெரிவித்துள்ளார். இவரது புகாரில் தேவதானப்பட்டி எஸ்.ஐ., தேவராஜ், பஸ் டிரைவர் இளங்கோவன், தேடப்பட்டு வரும் லாரி டிரைவர் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தார்.