/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேமராவை சேதப்படுத்திய விவசாயி மீது வழக்கு
/
கேமராவை சேதப்படுத்திய விவசாயி மீது வழக்கு
ADDED : ஜூலை 05, 2025 12:20 AM
தேனி; பழனிசெட்டிபட்டி வீருசின்னம்மாள்புரம் மேற்குத் தெரு விவசாயி சிவக்குமார் 52. இவருக்கும் அதேப்பகுதியில் உள்ள கருப்பசாமிக்கும் விவசாய பொதுக்கிணறு உள்ளது. இக் கிணற்றில் இருந்து வேளாண் பணிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இருதரப்பினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவக்குமார், தனது தோட்டப்பகுதியில் சி.சி.டி.வி., கேமராவை பொருத்தினார். ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள கேமராவை கருப்பசாமிஅகற்றி, மின்மோட்டார் குழாய்களை சேதப்படுத்தினார். இதுகுறித்து சிவக்குமார், கருப்பசாமியிடம் கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்தார். சிவக்குமார் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளித்தார். கருப்பசாமி மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.