/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வியாபாரியை காரில் கடத்திய ஐவர் மீது வழக்கு
/
வியாபாரியை காரில் கடத்திய ஐவர் மீது வழக்கு
ADDED : ஏப் 27, 2025 06:58 AM
தேனி : ஆண்டிபட்டியில் கண்ணாடி வியாபாரம் செய்தவாலிபரை காரில் கடத்திய ஐவர் மீது தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒசூர் ரோட்டை சேர்ந்தவர் நிர்மலா 47. இவரது கணவர் ரமேஷ் இறந்துவிட்டதால் அக்காராதா, தம்பி திலீப், தனது 2 பிள்ளைகளுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் ராதா மகன்கலுவா, சகோதரன் தீலீப் ஆகிய இருவர் தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கண்ணாடி வியாபாரம் செய்தனர். ஏப் 17 ல் நிர்மலா வீட்டிற்குசென்ற கலுவா, ஏப்.15ல் ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன் என்பவர் அலைபேசியில் அழைத்ததால்நானும், திலீப்பும் தேனி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு சென்றோம். அங்கு வந்த மோகன்டூவீலரில் இருவரையும் ஏற்றிக்கொண்டு சிறிது துாரம் சென்று இறக்கி விட்டார்.
காரில் வந்த நால்வர், நீங்கதானா போலி நகை கொடுத்து ஏமாற்றும் நபர்களா' எனக்கூறி தாக்கி, காரில்ஏற்றி கடத்தி சென்று ஒரு தோப்பில் கட்டி வைத்தனர்.
தீலீப்பை மட்டும் காரில் கடத்தி சென்றுவிட்டனர்.கலுவாவை, நீ எங்காவது ஓடிவிடு' என கொலை மிரட்டல் விடுத்தனர். தப்பித்து பெங்களூரு சென்ற கலுவா சகோதரியிடம் விபரம்தெரிவித்தார். அதன் பின் நிர்மலா தேனி வந்து இன்ஸ்பெக்டர்ஜவஹரிடம் புகார் அளித்தார். மோகன் மற்றும் காரில் கடத்திய 4 பேர் உட்பட ஐவர்மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

