/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மனைவி புகாரில் கணவர் உள்பட ஐவர் மீது வழக்கு
/
மனைவி புகாரில் கணவர் உள்பட ஐவர் மீது வழக்கு
ADDED : டிச 15, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : அல்லிநகரம் அழகர்சாமி காலனி மாலதி. இவரது கணவர் கவுதம். இத்தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார்.
இவர்கள் திருமணத்தின் போது மாலதி பெற்றோர் 10பவுன் நகை, ரூ.80ஆயிரம் பணம் வழங்கினர். இந்நிலையில் கவுதம் தாயார் அரசி, சகோதரிகள் நாகலட்சுமி, கவுசல்யா, உறவினர் லட்சுமணன் ஆகியோர் இணைந்து கவுதம் கடனில் உள்ளதால், லோன் வாங்கி தர வேண்டும் என மாலதியிடம் கூறினர்.
சில நாட்களின் கணவனை பார்க்க வரக்கூடாது என சண்டையிட்டு அனுப்பினர்.
கவுதமிற்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க உள்ளதாகவும் கூறி மிரட்டினர். மாலதி புகாரில் கணவர் உட்பட 5 பேர் மீது தேனி மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.